எச்சரிக்கையை மதிக்காத நபர்கள்.. ஆபத்தின் விளிம்பில் உற்சாகத்துடன் மக்கள் | Thanthitv

Update: 2024-05-26 17:22 GMT

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடற்கரை கோயில், ஐந்தரதம், வெண்ணை உருண்டைப் பாறை, புலிக்குகை ஆகிய புராதன சின்னப் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி யது. போலீசார் எச்சரித்தும் பலரும் ஆபத்தை உணராமல் தங்களது குழந்தைக ளுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்