தந்தி டிவிக்கு குவியும் வாழ்த்துக்கள்

Update: 2024-05-24 17:43 GMT

சேட்டிலைட் சேனலாக இல்லம்தோறும் சென்றடைந்திருக்கும் தந்தி டிவி, டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. இதில் மற்றுமொரு மைல் கல்லாக, ஒரு கோடி சந்தாதாரர்கள் என்ற மகத்தான சாதனையை தந்தி டிவியின் யூடியூப் சேனல் படைத்திருக்கிறது. தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், டிஜிட்டல் நேயர்களுக்காக தந்தி டிவியின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன. சினிமா விமர்சனம், பிரத்யேக பேட்டிகள், அரட்டைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெற்றி நடை போட்டு வரும் தந்தி டிவி யூடியூப் சேனலின் மற்றுமொறு சாதனைக்கு, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்