இலங்கை மாணவியின் நெகிழ்ச்சி செயல் முதல்வருக்கு தாயார் வைத்த கோரிக்கை CM ஸ்டாலின் போட்ட ஆர்டர்

Update: 2024-05-23 16:30 GMT

புதுக்கோட்டை தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் ஷரினா கிறிஸ்ட் மற்றும் மெனிஷா கிறிஸ்ட் ஆகியோர் கைப்பேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்கள். அவர்களின் இச்செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கையடக்க கணினிகளை வழங்கி வாழ்த்தினர். ஷரினா கிறிஸ்ட் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று அசத்திய நிலையில், மருத்துவத் துறையோடு தொடர்புடைய பாரா மெடிக்கல் பிரிவில் பிஎஸ்சி அனஸ்தீசியா பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு மாணவியின் தாயார் முதல்வருக்குக் கடிதம் மூலம் கோரியிருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மாணவி ஷரினா கிறிஸ்ட்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் அவர் விரும்பிய பட்டப்படிப்பு படித்திட சேர்க்கை ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்

Tags:    

மேலும் செய்திகள்