சுட்டெரிக்கும் வெயிலால் அதிசயம்..மே முதல் வாரமே புதிய உச்சம்! - இந்த மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கல!

Update: 2024-05-09 07:28 GMT
  • சுட்டெரிக்கும் வெயிலால் அதிசயம்
  • மே முதல் வாரமே புதிய உச்சம்!
  • இப்படி ஒரு மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கல!
  • தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் சுருண்டு கிடக்க, மற்றொரு புறமோ சூரிய மின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
  • கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு புகலிடமாக அமைவது மின்விசிறி, ஏர் கூலர், ஏசிகள் தான்.
  • இரவு பகலாக இவை இயங்குவதால், மின்சார நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • தமிழ்நாட்டின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ள நிலையில், இக்கொடும் கோடையில் 45.43 கோடி யூனிட்டாக உச்சத்தை தொட்டது.
  • மேலும் வருங்காலங்களில் கூடுதல் மின் தேவை ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுட்டெரிக்கும் வெயிலால் சூரிய மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில், பல்வேறு நிறுவனங்களால் நிலத்தில் அதிக திறனிலும், வீடுகளில் குறைந்த திறனிலும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித்திறன் 8 ஆயிரத்து 211 மெகாவட்டாக உள்ளது.
  • மழை பெய்யும் நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் பகல் நேரங்களில் சூரிய சக்தி மின்நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 2 முதல் 3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
  • இந்த மின்சாரத்தை மின் நிலையங்களின் உரிமையாளர்கள் பயன்படுத்தியது போக உபரியை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதில் அதிக திறன் உள்ள சூரியசக்தி மின் நிலைய மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.
  • கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, சூரியசக்தி மின் உற்பத்தி 3.99 கோடி யூனிட்டுகளாக இருந்தது. ஏப்ரல் இறுதி வரை இதுவே உச்சவரம்பாக இருந்தது. ஆனால் மே முதல் வாரத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, 4.05 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
  • இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மின் வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்