கழிவுநீர் குழியில் விழுந்த கன்று குட்டி - போராடி மீட்ட நெகிழ்ச்சி காட்சிகள்

Update: 2024-05-27 10:20 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத செப்டிக் டேங்க் ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக கன்று குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் செப்டிக் டேங்கில் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய கன்று குட்டியை பாதுகாப்பாக கயிறு கட்டி மீட்டனர். இந்த செப்டிக் டேங்க் பல நாட்களாக திறந்த நிலையிலே இருந்து வருவதாகவும் ஏதேனும் பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்குள்ளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை உடைத்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்