காயத்துடன் சடலமாக கிடந்த குழந்தை.. உடனே அடக்கம் செய்த உறவினர்கள்.. தோண்டி எடுத்த காவல்துறை..

Update: 2024-05-26 10:26 GMT

சிவகங்கை மாவட்டம் நாட்டார்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர். மனைவியை பிரிந்த இவர், மஞ்சு என்ற பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் சந்திரசேகரனின் சொந்த ஊர் திரும்பி அவரின் குடும்பத்தினருடன் ஒன்றி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், திடீரென 4 வயது குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சு, குழந்தை குறித்தான எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் இருந்ததால் சந்திரசேகரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில், நாட்டார் குடி அருகிலுள்ள கோயிலில் குழந்தை காயத்துடன் சடலமாக கிடந்த நிலையில், சடலத்தை மீட்ட உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் வருவாய்துறை முன்னிலையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்த உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், உடற்கூராய்வு முடிவில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் தந்தை சந்திரசேகரரை கைது செய்த போலீசார், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் தாயை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்