"பழங்குடியின குழந்தைகள் 55% பள்ளிக்கு செல்லவில்லை"வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-05 02:15 GMT
  • பழங்குடியின குழந்தைகள் 55 விழுக்காட்டினர் பள்ளிக்கு செல்லாதது, தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
  • மதுரையில் லாஸ் சட்டப்பணி மையம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 36 கிராமங்களில் வசிக்கும் பளியர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
  • ஆயிரத்து 173 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அரசுப்பணியில் இதுவரை ஒருவர் கூட இல்லை என்பதும்,
  • 55 விழுக்காடு ஆண் குழந்தைகளும், 45 விழுக்காடு பெண் குழந்தைகளும் பள்ளி செல்லவில்லை என்பதும், அதற்கு பள்ளிகளின் அமைவிட தொலைவு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
  • மேலும், 2 கிராமங்களில் அங்கன்வாடி மையம் இல்லை என்பதும், 34 கிராமங்களில் அங்கன்வாடி மையத்தை அணுக அரை கிலோ மீட்டர் முதல் 14 கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளதும் ஆய்வு முடிவில் தெரிகிறது.
  • 3 கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதி இல்லாததும், 22 கிராமங்களில் சுடுகாடு இல்லாததும் தெரியவந்துள்ளது.
  • ஆயிரத்து 244 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழும், பெரும்பாலானோருக்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட எவ்வித அடிப்படை ஆவணங்களும் இல்லை எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய ஆய்வாளர் அலாய்சியஸ் இருதயம், பழங்குடியின மக்களின் வாழ்வாதார பணிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்