சவுக்கு சங்கர் மீது குண்டாசா? பரபரப்பு மனு.. அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட் | Savukku Shankar

Update: 2024-05-09 02:15 GMT

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி

செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் பதியப்படுவதால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக விக்னேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, யூகங்களின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்