விபத்தில் சிக்கிய 64 நபர்கள்.. ஸ்பாட்டில் பரிதாபமாக போன 5 உயிர்.. "அதிக பயணிகளை ஏற்றி வந்ததே காரணம்"

Update: 2024-05-01 05:51 GMT

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த பேருந்தில், 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். சேலம் ஏற்காடு சாலையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, 11-ஆவது கொண்டை ஊசி வளைவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பயணிகளை ஏற்றி வந்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்