சென்னை, வெள்ள பாதிப்பு குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஒப்படைத்த அறிக்கை

Update: 2023-12-15 10:38 GMT

சென்னையில் வெள்ள மீட்பு பணிகள், சேத பாதிப்பிற்கு 968.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசிடம் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பித்துள்ளது...

மிக் ஜாம் புயல், கனமழையால் சென்னை பெருமளவு பாதிக்கப்பட்டது... 193 இடங்களில் முதல் மாடி அளவிற்கு மழை நீர் தேங்கிய நிலையில், அதை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது... பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், காவலர்கள், மீட்புக் குழுவினர் உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்

வெள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில் நிவாரண முகாம்களில் மட்டும் 14 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 லட்சம் உணவு பொட்டலங்களை மாநகராட்சி வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சிக்கு முதல் கட்டமாக 401 கோடியே 53 லட்ச ரூபாயும், அடுத்த கட்டமாக 566 கோடியே 88 லட்ச ரூபாயும் என மொத்தம் 968 கோடியே 39 லட்ச ரூபாய் ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மாநில வருவாய் பேரிடர் மேலாண்மை துறை ஆணையருக்கு சேத விவரங்களை சென்னை மாநகராட்சியின் முழு பட்டியலாக அனுப்பி நிதி உதவியை கோரி உள்ளது. சாலை சேதம், பள்ளிக் கூடங்கள் சேதம், கால்வாய் சேதம், வாகனங்கள் பழுது, சுரங்கபாதை, மேம்பாலங்கள், மழைநீர் வடிகால், மருத்துவமனை, மாநகராட்சி மயானங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் சீரமைப்பு உள்ளிட்டவைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்