அந்த துயரத்தை கூறி கண்ணீர் விட்டு கதறிய பெண்... உடனே ராகுல் செய்த செயல்..நெகிழ்ந்த பெண்கள்

Update: 2024-05-24 02:48 GMT

அந்த துயரத்தை கூறி கண்ணீர் விட்டு கதறிய பெண்... உடனே ராகுல் செய்த செயல்..நெகிழ்ந்த பெண்கள்

சிலிண்டர் விலை உயர்வு குறித்து கண்ணீர் விட்டு அழுத பெண்ணை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

டெல்லி மங்கோல்புரி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான, மகாலட்சுமி திட்டம் குறித்து பெண்கள் மத்தியில் எடுத்துரைத்து, பெண்களிடம் அவர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். பொதுக்கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர், ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்த‌தாகவும், தேர்தலுக்காக 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு கணவர் இல்லை என்றும், 4 குழந்தைகளை, தனி ஒரு பெண்ணாக வளர்த்து வருவதாகவும் கண்ணீர் விட்டு அழுது கூறினார். இதைக் கண்ட ராகுல் காந்தி, அந்த பெண்ணை தோளில் தட்டிக்கொடுத்து, அன்பாக ஆறுதல் கூறினார். இந்த செயல் பெண்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்