"காவல் நிலையத்தில் அண்ணன் பைக் கொஞ்ச தூரத்தில் சடலமாக கிடந்த உடல்"-இரவில் நடந்தது என்ன?விளகாத மர்மம்

Update: 2024-05-26 09:38 GMT

"காவல் நிலையத்தில் அண்ணன் பைக்

கொஞ்ச தூரத்தில் சடலமாக கிடந்த உடல்"

இரவில் நடந்தது என்ன? விளகாத மர்மம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதையில் பைக் ஓட்டிய இளைஞர் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி அருகே மருங்கூர் கீழக்கொல்லையைச் சேர்ந்த ராஜ்குமார் நேற்று இரவு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ராஜ்குமார் காவல் நிலையம் அருகே சாலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அறிந்த உறவினர்கள் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் நெய்வேலி அருகே வடக்குத்து என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராஜ்குமாரின் பைக் எப்படி காவல் நிலையம் வந்தது என அவர்கள் வினவியுள்ளனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது, தொடர்ந்து இளைஞரின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்