"உங்க சண்ட என்னோட தான.. என் அப்பா, அம்மாவ..போய்.."- எரிமலையாக குமுறும் கெஜ்ரிவால்

Update: 2024-05-23 16:24 GMT

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், கெஜ்ரிவால் பெற்றோரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே பிரசாரத்திலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை அழிக்க பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை கைது செய்தாலும் உங்களுக்கு தலை வணங்கவில்லை... திகார் சிறையில் என்னை அழிக்க முயற்சி செய்தீர்கள்... அப்படியும் முடியவில்லை என கூறியிருக்கும் கெஜ்ரிவால், ஏன் பெற்றோரை இழுக்கிறீர்கள் என மோடிக்கு கேள்வியை எழுப்பியுள்ளார். தனது தாய்க்கு பல நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தந்தைக்கு காது கேளாமை பிரச்சினை இருப்பதாகவும் கூறியிருக்கும் கெஜ்ரிவால்.. கடவுள் அனைத்தையும் கவனிக்கத்தான் செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்