21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அமைந்துள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், கும்ப அலங்காரம் பூஜைக்கு பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். இந்நிகழ்வில் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி கடலூர், சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் தீயணைப்பு வாகன மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.