அந்தரத்தில் பறந்த தாய், மகள் உயிர்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2024-05-22 13:32 GMT

பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமண்டப்புதூர் கிராமத்தை சேர்ந்த சந்தோசம், தனது மகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சின்னாறு அருகே சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தாய் சந்தோசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்....

Tags:    

மேலும் செய்திகள்