கவர்ச்சி திட்டத்தில் கவிழ்ந்த மக்கள் - ரூ.30 கோடியோடு ஜூட் விட்ட நிதி நிறுவனம் - நாமக்கல்லில் பரபரப்பு
திருச்செங்கோட்டில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி போலீசில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று கவர்ச்சி திட்டங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் ரூபாய் 30 கோடியை வசூல் செய்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், அதில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர்.