செய்யக்கூடாத கொடூரத்தை செய்த 16 வயது சிறுவன் - மயங்கி கிடந்த அப்பாவிக் குழந்தை

Update: 2024-01-13 15:22 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தையை, திண்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி தனியே அழைத்துச் சென்ற நிலையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் அழுகுரலால், சிறுவன் தப்பியோடிய நிலையில், நிர்கதியாய் மயங்கிக் கிடந்த குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதால், மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், தப்பியோடிய சிறுவரை பிடித்து போக்சோவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்