இப்படி கூப்பிட்டால் நம்பி போய்விடாதீர்கள்.. கேரளாவில் வலைவீசும் கிட்னி திருடர்கள்

Update: 2024-05-23 07:58 GMT

கேரளாவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்று மனித உடல் உறுப்புகளைக் கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபீர் நாசரை 10 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து உள்ளனர்.

கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்துச்சென்று மனித உடல் உறுப்புகளைக் கடத்தி விற்பனை செய்வதாகக் கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாகப் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த சபீர் நாசரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

சர்வதேச உடல்உறுப்பு மாஃபியா கும்பலுடன் சபீர் தொடர்பில் இருந்துள்ளார். இதைப்பயன்படுத்தி கொச்சியிலிருந்து குவைத்-க்கும், ஈரானுக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 2018 முதல் 200-க்கும் மேற்பட்டோரை ஈரான், குவைத் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி உடல் உறுப்புகளை விற்று கோடி கணக்கில் பணம் சம்பாதித்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சபித் நாசரை 10 காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்ற நீதிமன்றம் சபித் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்