நினைக்காத நேரத்தில் அணை உடைந்து கடல் போல மாறிய 20 கிராமங்கள் - மிதந்த 30 உடல்கள்..

Update: 2024-08-27 08:09 GMT

அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ரெட் சீ மாகாணத்தில் அமைந்துள்ள அர்பாத் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், அணை நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதில், 20 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அணையின் மேற்கு பகுதியை மட்டுமே சேர்ந்தது என்றும், கிழக்குப் பகுதியை தற்போது அணுக முடியாத நிலையில் இருப்பதால் சேத விவரங்கள் தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, அந்நாட்டில், அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், உள்நாட்டு போர் காரணமாக, 5 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், சரி பாதி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போர்ட் சூடானின் முக்கிய நீராதாரமாக விளங்கிய அணை உடைந்து பெரும் சேததத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்