இனி நில பத்திர பதிவில் ஆள்மாறாட்டம் செய்யவே முடியாது - தமிழக அரசு வைத்த தரமான செக்

Update: 2023-08-26 05:59 GMT

ஆள்மாறாட்டத்தை தடுக்கவும் உண்மை உரிமையாளரை கண்டறியவும், நிலப்பட்டாவுடன் ஆதார் இணைப்பை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

தமிழக அரசைப்பொறுத்தவரை, பத்திரப்பதிவுத்துறையை கணினிமயமாக்கியதுடன், தற்போது பத்திரப்பதிவின்போதே ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. மேலும், பத்திரப்பதிவின்போது ஆள்மாறாட்டத்தை தடுக்க ஆதார் வழியிலான சரிபார்த்தலை தமிழக அரசு கொண்டுவந்து, அதன் மூலம் அனைத்து பதிவுகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, பட்டா மற்றும் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தி, அததற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்