தமிழக Strong Room-ல் அதிர்ச்சி..திடீர் செயலிழப்பு.. பதறிய ஏஜெண்டுகள் - நாடி நரம்பு உறைய நின்ற வேட்பாளர்கள்

Update: 2024-04-29 02:38 GMT

உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள strong ரூமை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

நீலகிரி மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கபட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி முகவர்கள் ஸ்ட்ராங் ரூமை சிசிடிவி காட்சிகள் கொண்ட TV மூலம் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு

காரணமாக டிவியில் தெரியாததால் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தேர்தல் அலுவலர் முன்னிலையில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் strong room-ஐ நேரில் பார்வையிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முற்றிலுமாக சீல் வைத்ததை உறுதி செய்த பின் அனைவரும் திரும்பி சென்றனர். முன்னதாக,

சிசிடிவி கேமராக்கள் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாமல் 20 நிமிடங்கள் செயலிழந்து விட்டதாக கூறிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அருணா, strong room 200 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்