தலைக்கேறிய போதை - எச்சரித்ததால் காவலருக்கு விழுந்த அடி - நாமக்கல்லில் பரபரப்பு

Update: 2024-05-24 14:09 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மதுபோதையில் பைக்கில் வந்து கீழே விழுந்த இருவர், தங்களை தட்டிக்கேட்ட ஊர் காவல் படையினரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடை சேர்ந்த சகோதரர்களான ஊமையன் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகிய இருவர், ஒரே பைக்கில் மதுபோதையில் வந்து தடுமாறி விழுந்திருக்கின்றனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர் காவல் படையினர், இருவரையும் மீட்டு எச்சரித்த நிலையில், அவர்களிடம் அத்துமீறிய சகோதரர்கள், ஒரு கட்டத்தில் ஊர் காவல் படையினரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்