தன்னை ஜெயிலுக்குள் தள்ளிய இன்ஸ்பெக்டரை சிறைக்கு அனுப்பிய சாமானியன்.. நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம்

Update: 2024-05-25 03:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில், பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் காவல் ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டு சிறை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் கொழிஞ்சித் தோட்டத்தை சேர்ந்தவர் வேலு. விவசாயம் செய்து வரும் வேலுவுக்கும், அவரது பெரியப்பாவுக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.இது தொடர்பாக, வேலுவின் மீது புகார் பதிவான நிலையில், வேலு கைது செய்யப்பட்டார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சுப்பிரமணி வேலுவை அழைத்து தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். மேலும் காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்ட வேலு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், கடந்த 2022ம் ஆண்டு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இதில், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியத்துக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்தனர். தீர்ப்பினை எதிர்த்து நாமக்கல் நீதிமன்றதில், சுப்பிரமணியம் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த தாழ்த்தபட்டோர் விசாரணை நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியம், வாச்சத்தி சம்பவத்தில் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்