"ஹிந்தி தெரியாது போடா"... ஒரே போட்டோ.. தரமான சம்பவம் - சீண்டிய பாஜகவுக்கு உதயநிதி கொடுத்த பதில்

Update: 2024-01-22 13:59 GMT

அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடில்லை என சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து, நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பேசுபொருளானது. இதனிடையே, பாஜகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு இந்தியில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், பாஜகவின் இந்த பதிவுக்கு, 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்