3 நாள் உணவு, தண்ணீர் இன்றி... கழிவறையிலேயே படுத்திருந்த இளைஞர் ..கதவை உடைத்த போலீசார் . பின்புதான் ட்விஸ்ட்!

Update: 2023-08-22 03:44 GMT

அரக்கோணம் அருகே, கதவை திறக்கத் தெரியாதால், ரயிலின் கழிவறையிலேயே 3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பயணம் செய்த வடமாநில இளைஞரை ரயில்வே போலீசார் மீட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரிலிருந்து மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்ட எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 2 பெட்டியின் கழிவறை பூட்டியே இருந்துள்ளது. ஆனால், உள்ளே இருந்து சத்தம் மட்டும் வந்துள்ளது. அரக்கோணம் அருகே ரயில் வந்தபோது, இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் அளித்தனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய போலீசார், கழிவறையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த வடமாநில இளைஞரை மீட்டனர். மனநலம் பாதித்த அந்த இளைஞர், கழிவறைக்கு சென்றுவிட்டு, கதவை திறக்கத் தெரியாததால், உணவு, குடிநீர் இன்றி 3 நாட்களாக சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு உணவளித்த ரயில்வே போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்