காளையார்கோயில் சிறையில் இறந்த ஆயுள் கைதி போஸ்மார்ட்டத்தில் ஷாக் தகவல்

Update: 2024-02-09 08:23 GMT

ஆயுள் தண்டனைக் கைதி சிறையில் இறந்த விவகாரத்தில், சிவகங்கை டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த இலங்கேஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், காளையார்கோயில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த தனது கணவர் கருப்பசாமி, இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும், தனக்கு உரிய இழப்பீடு கொடுப்பதுடன் முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி இறந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை சிவகங்கை நகர டி.எஸ்.பி 4 வாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், காவல்துறையிடம் மனுதாரர் இழப்பீடு கோர முடியாது என்று கூறினார். தேவைப்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இழப்பீடு கோரி மனுதாரர் முறையிடலாம் என்றும் நீதிபதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்