நீச்சல் குளத்தில் ஸ்டண்ட்... சிறுவனின் உயிரை பறித்த `கால்' - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-05-22 13:26 GMT

மத்திய பிரதேசம் ரட்லம் பகுதியில் நீச்சல் குளத்தில் குதித்த மாணவரின் கால் பட்டு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அனிகேத் திவாரி என்ற 18 வயது சிறுவன் நீச்சல் குள கரையில் அமர்ந்திருந்த போது மற்றொரு சிறுவன் ஓடி வந்து உள்ளே குதிக்க முயன்றார். அப்போது அந்த சிறுவனின் கால் அனிகேத்தின் முகத்தில் பலமாக மோதி அனிகேத் நீரில் விழுந்து மூர்ச்சையுற்றார்... நீண்ட நேரமாக சுற்றி இருந்தவர்களோ, நீச்சல் குள பாதுவாலர்களோ சிறுவன் அனிகேத்தை மீட்காமல் இருப்பதை வீடியோ காட்டுகிறது... அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பரிதாபமாக பிரிந்தது... சம்பந்தப்பட்ட டால்பின் நீச்சல் குளத்தில் நிகழும் 2வது மரணம் இது... அதிகாரிகள் அந்த நீச்சல் குளத்திற்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்