"நீண்ட நாட்கள் முடியாது" - ED வழக்கில் பொன்முடி மகனிடம் நீதிபதி காட்டம்

Update: 2023-12-23 02:45 GMT

விழுப்புரத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக எம்.பி கவுதம சிகாமணி உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6 பேர் மீது 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த சூழலில், குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கவுதம சிகாமணி ஆஜராகாத நிலையில், அவரது தரப்பில் ஒருமாதம் அவகாசம் கோரப்பட்டது. எனினும், வழக்கை நீண்ட நாட்கள் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி மலர், குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணையை ஜனவரி 4 தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்