கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ

Update: 2024-04-20 07:04 GMT

திருப்பூரில், தங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்ட இளைஞர் ஒருவரை திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ வெளியாகி பரவி வருகிறது.மக்களவை தேர்தலை முன்னிட்டு, திருப்பூரின் 36 ஆவது வார்டு கவுன்சிலரான திவாகரன் என்பவர், வாக்குச்சாவடி அருகே நின்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர் ஒருவர் கேட்ட இந்த கேள்வியால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திவகாரனின் ஆதரவாளர்கள் இளைஞரை தாக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்