`நம் ஓட்டு நம் பிரதமர்' - பிரம்மாண்ட ஒரு விரல் புரட்சி கோலம்

Update: 2024-03-28 17:18 GMT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்

50 அடி நீளம் 30 அடி அகலம் கொண்ட ஒரு விரல் புரட்சி கோலம் வரையப்பட்டிருந்தது... மேலும் இந்திய நாடாளுமன்றம் போன்ற கோலங்களையும், நம் ஓட்டு நம் பிரதமர் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோலங்களையும் வரைந்திருந்தனர்... 25 ஆசிரியைகள் தங்கள் முகங்களில் வாக்குப்பதிவு தொடர்பான ஓவியங்களையும் வரைந்து அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்