OPS-க்கு பரவாயில்லை.. ACS நெலம தான்... AC சண்முகத்துக்கு எதிராக 9 சண்முகங்கள்..! ராம்நாட்டை மிஞ்சிய வேலூர்

Update: 2024-03-29 10:34 GMT

வேலூர் மக்களவைத் தொகுதியில் சண்முகம் என்ற பெயரில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சண்முகம், சண்முகவேலு, சண்முக சுந்தரம் என்ற பெயரிலேயே மொத்தமாக 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், அதில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தவிர்த்து, மற்ற 8 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள். ஏ.சி.சண்முகம் என்ற பெயரைக் கொண்ட மற்றொருவரும் இப்பட்டியலில் உள்ளார். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரே பெயர் உடைய நபர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குரிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தச் செயலில் தி.மு.க.வினர் ஈடுபடுவதாக பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்