Boy Death | Namakkal | பிணமாக கிடைத்த 4 வயது மகன்.. பாதாள சாக்கடையை பார்த்து கதறிய பெற்றோர்..
பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு
நாமக்கலில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமுதலைப்பட்டி பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரோகித், திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, தண்ணீர் தேங்கியிருந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிறுவன் ரோகித் சடலமாக மூழ்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.