Tirupathur Attack | புத்தாண்டு கொண்டாட்டத்தில் அட்ராசிட்டி.. | வீடு புகுந்து தாக்கிய போதை இளைஞர்கள் | பரபரப்பு காட்சி

Update: 2026-01-02 05:19 GMT

மது போதையில் அட்டகாசம் - தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

திருப்பத்தூர் அருகே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் அட்டகாசம் செய்தவர்களை தட்டிக் கேட்ட இளைஞரை தாக்கி, அவருடைய வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராண்டபள்ளியில், போதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 4 பேரை தட்டிக் கேட்ட முருகேஷ் குமாரை, அவர்கள் தாக்கி, வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசேன்,

இர்ஃபான், ஆகாஷ், அபிசேக் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்