திடீரென வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.. ஆக்ரோஷமாய் சீரும் அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-26 12:21 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. சிறுத்தையை கண்ட இடும்பன் என்பவர், சாதுரியமாக வீட்டின் கதவை பூட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விரைந்த வனத்துறை அதிகாரிகள், மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டுக்குள் ஏற்றினர். சிறுத்தைக்கு லேசான காயம் இருந்த நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்