கோவையை மொத்தமாக நனைத்த மழை! - ஏர்போர்ட்டில் வெளியான அறிவிப்பு

Update: 2024-05-23 03:36 GMT

தொடர் மழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவையில் இருந்து ஹைதராபாத்திற்கு இரவு 8:50 மணிக்கு புறப்படவேண்டிய விமானம் மழை காரணமாக 9.15 மணியாகியும் புறப்படவில்லை. இதேபோல், இரவு 9.15 மணிக்கு சென்னை செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டது. இரவு 9.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்