2016-ல் உலுக்கிய 100 பேரின் மரணம் - 4 வருடம் கழித்து வெளியான உத்தரவு

Update: 2024-05-23 11:34 GMT

கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.கடந்த 2016-ம் ஆண்டில் பரவூர் புற்றிங்கல் தேவி அம்மன் கோயில் திரு விழாவில் பட்டாசு வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் வாண வேடிக்கையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள், மற்றோர் பகுதியில் குவித்துவைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தன. தீ மிகவும் அதிகமாக பரவியதால் பலரும் தீயில் சிக்கிக்கொண்டனர். இதுவரை 110 பேர் பலியான நிலையில், 600-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு 2020-ல் வெடி விபத்து குறித்த குற்றப்பத்திரிக்கை பரவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிகாரிகள் உட்பட 59 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில்15 பேர் கோவில்நிர்வாகிகள் ஆவர்.

குற்றம்சாட்டப்பட்ட 59பேரில் 8 பேர் விசாரணை தொடங்கும் முன்பே இறந்து விட்டனர். 44 பேர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது ஜாமீனில் உள்ள 51 பேரும் கொல்லம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்