காதலனோடு பைக்கில் சென்ற தங்கை..பின்னாலே போய் அண்ணன் செய்த காரியம் - குலைநடுங்க வைக்கும் சம்பவம்

Update: 2024-05-17 10:10 GMT

தனது சகோதரியைக் காதலித்த இளைஞரை ஸ்க்ரூ ட்ரைவரால் குத்திக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவை அதிர வைத்துள்ளது...பெலகாவி நகரின் காந்திநகரைச் சேர்ந்தவர் 22 வயது இப்ராகீம் கவுஸ்... இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் சகோதரர் முசாமில் சட்டிகேரிக்கு தெரிந்த போது, அவர் இப்ராகீம் கவுசை அழைத்து எச்சரித்து, தனது சகோதரியை விட்டு விலகும்படி கூறியுள்ளார்... ஆனால் இப்ராகீம் கவுஸ் தொடர்ந்து அந்த பெண்ணுடன் காதலை வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது... நேற்று பிற்பகல் நேரத்தில் இப்ராகீம் கவுஸ், தனது சகோதரியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்த முசாமில் சட்டிகேரி, அவர்களை பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார்... தனது சகோதரியை அங்கேயே விட்டு விட்டு செல்லும்படி எச்சரித்துள்ளார்... இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முசாமில் சட்டிகேரி தனது பைக்கில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து இப்ராகீம் கவுசை கண்மூடித்தனமாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய முசாமில் சட்டிகேரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்