போதை மறுவாழ்வு மையத்தில்.. நோயாளிகளை அடித்து சித்ரவதை.. அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

Update: 2023-10-01 08:34 GMT

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தை சீமான் தமிழ்வேந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையங்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சித்ரவதை செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன...

தொடர்ந்து அதிகாரிகள் நோயாளிகளிடம் விசாரணை நடத்தினர். நோயாளிகள் துன்புறுத்துவப்படுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த 30 பேர் மீட்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மேலும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து சீமான் தமிழ்வேந்தனை புழல் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்