புதிய உச்சத்தில் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு பேரிடி

Update: 2023-10-20 07:57 GMT

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 600 உயர்ந்து 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 77 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. போர் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே விலை உயர்வுக்கு காரணமாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்