நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த கும்பல்.. கண்ணில் பட்டதெல்லாம் உடைத்து கொடூரம்... - பரபரப்பு வீடியோ
பண்ருட்டி அருகே, இடப்பிரச்சினை காரணமாக நள்ளிரவில் அடியாட்களை வைத்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சரவணன் 5க்கும் மேற்பட்ட அடியாட்களை அனுப்பி நள்ளிரவு நேரத்தில் கத்தி, கடப்பாறை, சுத்தி கொண்டு தனது வீட்டின் சுவரை இடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுமதி புகார் அளித்துள்ளார்...