கணக்கில் வராத ரூ.45கோடி..வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்

Update: 2023-11-06 16:22 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்றது. வருமானத்திற்கு அதிகமாக 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து கடந்த மே மாதம் தருமபுரி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கே.பி.அன்பழகன், அவரது உறவினர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் தர்மபுரி நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அடுத்த விசாரணை வரும் 22-ஆம் நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்