மகளிர் சுய உதவி குழுவில் டிரோன் பைலட்... மத்திய அரசின் சூப்பர் பிளான்

Update: 2023-11-29 13:41 GMT

கொரோனா காலகட்டத்தில் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய, 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ட்ரோன்கள் வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 261 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் இந்த ட்ரோன்கள் மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு, 5 நாட்கள் டிரோன் பைலட் குறித்த பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்