திமுக பிரமுகர் நில பத்திரப்பதிவு விவகாரம் - சார்பதிவாளர் உட்பட 13 பேர் மீது பாய்ந்த வழக்கு

Update: 2024-04-25 06:40 GMT

வத்தலகுண்டு அருகே தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான நிலத்தை முறையான ஆவணங்களின்றி பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் சார்பதிவாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவகம்பட்டி பேரூராட்சி தி.மு.க. செயலாளராக உள்ள தங்கராஜ், கடந்த 2010-இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 62 சென்ட் நிலத்தை வாங்கினார்.

இந்த நிலையில், 2023 டிசம்பரில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சகாய செல்வி, தங்கராஜ் வாங்கிய நிலம், தனது பூர்வீக நிலம் எனக்கூறி அய்யம்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் போலி ஆவணங்களை தயாரித்து மதுரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சாமுவேலுக்கு நிலத்தை விற்பனை செய்தார். சில தினங்களில் கிறிஸ்டோபர் சாமுவேல் பெயரில் இருந்த 62 சென்ட் நிலத்தை சகாய செல்வி தன் பெயரில் சார்பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் மாற்றினார். இது தொடர்பாக திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் தங்கராஜ் புகாரளித்தார். சகாய செல்வி சமர்ப்பித்த ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக சார்பதிவாளர் பாலமுருகனை, போலீசார் கைது செய்தனர். நில மோசடி செய்த சகாய செல்வி, கிறிஸ்டோபர் சாமுவேல் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்