ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட நிதி இல்லாமால் இருந்த 2 மாணவர்களுக்கு திமுக எம்எல்ஏ கொடுத்த surprise

Update: 2023-07-28 09:22 GMT

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.

விஞ்ஞானி சிவதானு பிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஏவுதள அறிவியல் பயிற்சி ஆன்லைன் மூலமாக கடந்த 2022 ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 500 மாணவ மாணவிகளில், காஞ்சிபுரம் திருவள்ளுவர் வேலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ மாணவிகள் இறுதி கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆறு மாணவ மாணவிகள் தேர்வாகினர். இதனிடையே நிதி இல்லாததால், 4 மாணவ மாணவிகள் மட்டுமே செல்லும் நிலை இருந்த நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி இரண்டு மாணவிகளுக்கு, நான்கு லட்ச ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்