#JUSTIN || வந்த வேலையை காட்ட தொடங்கியது `ரீமால் புயல்..' துடிதுடித்து பலியான 17 உயிர்கள் | Thanthitv

Update: 2024-05-27 13:13 GMT

மேற்கு வங்கத்தின் ரீமால் புயல் காரணமாக தெற்கு கடலோரப் பகுதிகளில் 24 தொகுதிகள் மற்றும் 79 நகராட்சி வார்டுகளில் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 2,140 மரங்கள் வேரோடு சாய்ந்தன, மேலும் 337 மின்கம்பங்கள் விழுந்துள்ளன

மேலும் சேதங்கள் குறித்து அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகிறார்கள்

2,07,060 பேரை 1,438 பாதுகாப்பான தங்குமிடங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்,

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுந்தரவனம் மற்றும் மாநிலத்தின் பிற கடலோரப் பகுதிகளில் ரீமால் புயல் காரணமாகஉயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துள்ளார்

முதல்வர் தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் பேசி, ரீமால் புயலால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து விசாரித்தார். சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட சேதங்களின் அளவு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்