நீதிமன்றத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் | C. V. Shanmugam | Thanthitv

Update: 2024-05-27 12:17 GMT

2022இல் இரண்டு நிகழ்வுகளில் முதலமைச்சர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 3 அவதூறு வழக்குகள் செய்யப்ட்டன. இந்நிலையில் இன்று இந்த 3 வழக்குகளும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சி.வி.சண்முகம், இந்த 3 வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்குகளின் விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்