மனைவியை பிரிந்த கணவன் உடல் கருகி பரிதாப பலி..பக்கத்தில் இருந்த டேபிள் ஃபேன் - கடலூரில் அதிர்ச்சி

Update: 2024-05-24 09:23 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, வீட்டிற்குள் உடல் எரிந்த நிலையில் இளைஞர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியே வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், தீனதயாளின் வீட்டிற்குள் இருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில், வீட்டிற்குள் உடல் எரிந்த நிலையில் தீனதயாளன் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டேபிள் ஃபேன் அருகே தீனதயாளன் படுத்திருந்த நிலையில், அவரின் தலை மற்றும் வலது கையுடன் சேர்ந்து மின்விசிறியும் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தீனதயாளனின் மரணம் விபத்தா, தற்கொலையா அல்ல கொலையா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்