மெட்ரோ ரயிலில் குவிந்த பயணிகள் கூட்டம் - மெட்ரோ நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை வண்ணாரப்பேட்டை-ஆலந்தூர் இடையே 3 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக புறநகர் ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே 3 நிமிட இடைவெளையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மார்க்கத்தில் கூட்ட நெரிசலை பொருத்து 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, எழும்பூரில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க, மொபைல் ஆப், வாட்ஸ் ஆப், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.