விவசாயியை உதைத்த ஊராட்சி செயலாளர்...அதிரடி முடிவு எடுத்த நீதிமன்றம் | Madurai High Court

Update: 2023-10-07 16:57 GMT

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி பிள்ளையார்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி, தலையாரி முத்துலட்சுமிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தராததன் காரணமாக தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது ? என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில், அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்