பஸ் மோதி பயங்கர விபத்து.. தூக்கி வீசப்பட்டு ஸ்பாட்டிலேயே 2 இளைஞர்கள் பலி.. பரபரப்பு

Update: 2024-05-25 03:33 GMT

சிதம்பரம் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிதம்பரத்தை அடுத்த குத்தாபாளையத்தைச் சேர்ந்த கிரிவளவன், கலையரசன் இருவரும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தினக்கூலி வேலை செய்து வந்தனர். நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் பரங்கிப்பேட்டை சென்று விட்டு குத்தாபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது, அவர்களின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் தலைமறைவாகி விட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்து வந்த கிராம மக்கள், ஆத்திரமடைந்து, பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடம் நீடித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்